வைரல் ஆகும் "பிரேமம்" திரைப்பட நடிகரின் புகைப்படம்
#TamilCinema
#Actor
Prasu
3 years ago
நடிகர் நிவின் பாலியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலையாளத் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நிவின் பாலி. இவர் பிரேமம் படத்தில் ஹீரோவாக நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமடைந்தார். மேலும் இவர் நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் ரிச்சி என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பிரபல காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து நிவின் பாலி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நிவின் பாலி உடல் எடை கூடி குண்டான தோற்றத்தில் இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நிவின் பாலியா இது? என அதிர்ச்சியடைந்துள்ளனர் . தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .